தவறான அன்பர் இது நீ எனக்கு கொடுக்கவில்லை இது இன்னும் அதிகம் வேண்டும் என்றெல்லாம் யாசிப்பான் எதிர் பார்ப்பான் எதிர்பார்ப்பு அன்பை விஷம் ஆக்குகிறது. நன்றி அன்பை அமுதமாக்குகிறது. வற்றாத அன்பு குறையாத ஆனந்தம் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் குறைகளைக் கண்டு கொள்ளாத குழந்தை தனம் கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல் கடவுள் கொடுக்காத இன்பங்களைக் கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்று வணங்கும்; விசுவாசம்தான் உண்மையான அன்பு.
Tuesday, 16 April 2013
Saturday, 13 April 2013
அன்பை அறிந்தோமா?
பெரும்பாலும் நாம் நடைமுறையில் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு என்பது வியாபார நோக்கம் உடையது. உண்மை அன்பு வணிக நோக்கம் உடையது அல்ல. நாம் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு வரன்முறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது உண்மைக்கு எந்த வரன்முறைகளும் கட்டுப்பாடும் கிடையாது நம் வாழ்க்கை அடிப்படையே பொருளாதாரம் ஆகிவிட்டது. எப்படி? குடும்பம் நடத்துவதற்கு கல்யாணம் வரதட்சனைவரை பொருளாதாரமாகவியாபாரமாக மாற்றி விட்டோம் கோவிலுக்குச் சென்றால் அன்பை உணரலாம் என்றால் கோவிலிளும் பொருளாதாரம் வியாபாரம் ஆகிவிட்டது.
Thursday, 21 March 2013
எல்லாம் அவன் செயல் பாவ புண்ணியம் உண்டா இல்லையா
எல்லாம் அவன் செயல் என்கிறார்கள் சிலர். உன் வாழ்க்கை உன் கையில்
என்கிறார்கள் சிலர். குழப்பத்தை தீர்க்கவும். இப்படிக்கு ஆல்வின் சாம். குரு;
நல்லது முதலில் நம் வாழ்க்கையானது நமதுமனம்ää அறிவுத்திறன்ää பெற்றோர்ää சுற்றம் சமூகம் நட்பு கல்வி பொருளாதாரம் நாடு (இடம்) ஆரோக்கியம் முதலியவை சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. நம் கைகள் மட்டுமல்ல நமது உடலே நமக்கொரு கருவிதான்.
Wednesday, 27 February 2013
ரமணர் நான் யார்?
பகவான் ரமணரின் நான் யார் என்ற நூலை படித்தேன் ஒன்றும் புரியவில்லையே?
பெருமாள், புதூர். குரு: புரியாது! எந்த நூலுமே எந்த
நோக்கத்தோடு படிக்கிறீர்களோ அதற்குத் தக்கவாறு அது புரிந்து
கொள்ளப்படும்.நான் யார் என்ற நூலை படிக்கும்போது நான் யார் என்ற
தேடுதலோடு படிக்கவேண்டும்.நன்கு பக்குவமாக பழுத்த பழம் போன்ற இனிமையான
ரமணரை புரியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் கோவிலுக்கு சென்று
வழிபாடு முதலியவை செய்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவதே சிறந்தது.
பெருமாள், புதூர். குரு: புரியாது! எந்த நூலுமே எந்த
நோக்கத்தோடு படிக்கிறீர்களோ அதற்குத் தக்கவாறு அது புரிந்து
கொள்ளப்படும்.நான் யார் என்ற நூலை படிக்கும்போது நான் யார் என்ற
தேடுதலோடு படிக்கவேண்டும்.நன்கு பக்குவமாக பழுத்த பழம் போன்ற இனிமையான
ரமணரை புரியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் கோவிலுக்கு சென்று
வழிபாடு முதலியவை செய்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவதே சிறந்தது.
இறைவன் எங்கு இருக்கிறார்
இறைவன் எங்கு இருக்கிறார்? 23-2-13 அன்று பின்னூட்டத்தில் வந்த
கேள்விக்கு குருவின் பதில் குரு:மதங்களின் வழியில் கடவுளைத்
தேடாதே! இயற்கையைப்பார்! உன் அகத்துள்ளே தேடு! உண்டு என்றால் அவன் இல்லை.
இல்லை என்றால் அவன் உண்டு. உன்னில் கரைந்து போ!
Saturday, 23 February 2013
வேதாந்தம் சித்தாந்தம் விளக்கம்
வேதாந்தம் சித்தாந்தம் விளக்கம் என்ன? குரு;வேதாந்தம் என்பது பஞ்ச பூதங்களைய பற்றிய அறிவும் வாழ்க்கை நெறிகளை சொல்வதும் ஆகும்.அது அனுமனங்களையே அதிகமாக தொக்கி நிற்கிறது. சித்தாந்தம் என்பது எதையுமே தொட்டு அறிந்து அனுபவித்து உணர்ந்து கொடுக்கப்படும் முடிவான முடிவு.
Tuesday, 19 February 2013
Subscribe to:
Posts (Atom)