Saturday 13 April 2013

அன்பை அறிந்தோமா?


பெரும்பாலும் நாம் நடைமுறையில் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு என்பது வியாபார நோக்கம் உடையது.  உண்மை அன்பு வணிக நோக்கம் உடையது அல்ல. நாம் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு வரன்முறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது உண்மைக்கு எந்த வரன்முறைகளும் கட்டுப்பாடும் கிடையாது நம் வாழ்க்கை அடிப்படையே பொருளாதாரம் ஆகிவிட்டது.  எப்படி?  குடும்பம் நடத்துவதற்கு கல்யாணம் வரதட்சனைவரை பொருளாதாரமாகவியாபாரமாக மாற்றி விட்டோம் கோவிலுக்குச் சென்றால் அன்பை உணரலாம் என்றால் கோவிலிளும் பொருளாதாரம் வியாபாரம் ஆகிவிட்டது.
 சாமி தரிசனம் பண்ண ரூ.100 என்று அவர்கள் ஆக்கி விட்டார்கள்.  நீங்கள் 10ரூ உண்டியலில் போட்டு விட்டு 10 லட்சம் கேட்க கூடிய காலமாக வியாபரமாக அன்பு நிலை உணர முடியாமல் போய்விட்டது. 

எடுத்துக் காட்டாக முதல் ரேங்க வாங்கினால் பையன் மீது அன்பும் பெருமையும் பொங்கி கொண்டு வரும் விளையாட்டு டி.வி என சற்று கவனக் குறைவாகிக் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டால் தொலைந்தது அன்பு. தான் விரும்பிய பட்டுப்புடவையோ நகையோ கணவன் வாங்கித் தந்தால் அன்பு பீறிட்டுக் கொண்டு கிளம்பும் வாங்கித் தராதபட்சத்தில் வெறுப்பு பொத்து கொண்டு அன்பு நிலை மாறிவிடுகிறது.  வாய்க்குச் சுவையாகச் சமைத்திருந்தால் மருமகள் மீது அன்பு பொத்துக் கொண்டு வரும் தப்பித்தவறி உப்பு காரம் சற்றுக் கூடுதல் குறைவாக அமைந்துவிட்டால் அன்பாவது பாசமாவது அத்தனையும் பறந்து விடும் இவைதான் இன்று நடைமுறையில் நாம் வைத்திருக்கும் அன்பு இது அன்புக்கு நாம் அளித்துள்ள சமூக வடிவமே தவிர அன்பின் உண்மை வடிவம் அல்ல அப்படியெனில் அந்த உண்மை அன்பை எப்படித்தான் உணர்வது? உங்கள் குடும்ப உறவு முறைகளில் (அப்பாää மகன்) கணவன்ää மனைவி மாமியார் மருமகள் அண்ணன் தம்பி இப்படி உறவு முறைகளில் கீழ்கண்ட வினாக்களை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள்.  உங்கள் அன்பு உண்மையானதா போலியான சமூக அன்பா என்பது யாரும் சொல்லாமல் உங்களுக்கே விளங்கும் உங்கள் குடும்ப உறவு முறையில் உள்ளவர்களுக்கு பிடித்த உணவு எது?  ஏன்று உங்களுக்குத் தெரியுமா?  பிடித்த உடை எது?  புpடித்த வண்ணம் எது? புpடித்த நண்பர்கள் யார் யார்? விரும்பும் பாடல் எது? விரும்பும் நிகழ்ச்சி எது? அறிவு நாட்டம் எப்படிபட்டது? ஆன்மீக நாட்டம் உண்டா? அவர்களிடம் உள்ள திறமைகள் என்னென்ன?  குறைகள் என்னென்ன?  பிறந்த நாள் எது? பிறந்த நட்சத்திரம் எது? இப்படி அடுக்கடுக்காய்க் கோள்விகள் கேட்டுப் பாருங்கள் எல்லாவற்றுக்கும் மிகச்சரியான விடை இருவருக்கும் தெரிந்திருந்தால் இருவரும் மனம் ஒத்த உறவினர்கள் என்பது பொருள். சரியான விடை ஒருவருக்குமட்டும் தெரிந்து இருந்தால் அவரிடம் இருப்பது உண்மை அன்பு என்பது பொருள் சரியான விடை மற்றவருக்கு தெரிந்திருந்தால் அவரிடம் இருப்பது உண்மை அன்பு என்பது பொருள் தேவைப்படும் நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் உங்கள் குடும்ப உறவு முறையில் உள்ளவர்களின்.  நடையும் உடையும் அசைவும் பேச்சும் சிரிப்பும் உங்கள் கவனத்தை ஈர்க்க வில்லையா?  வாத்து மாதிரி நீங்க உண்டு உங்கள் வேலை உண்டு என்று இயந்திரமாக இருக்கிறீர்களா? உங்களுக்குள் அந்த உண்மை அன்பு இன்னும் மலரவில்லை என்று பொருள் பொதுவான இயற்கை நியதி ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  உலகத்தில் புத்திசாலின்னா என்னா? உங்களை உலகத்தில் எப்போழுது புத்திசாலின்னு சொல்லுவாங்கன்னா நீங்கள் சந்தைக்கு போகிறீங்க ரூ. 10 கொடுத்து ரூ.20 பொருள் ஏதோ வாங்கி வந்தீங்க அப்பொழுது நீ எவ்வளவு புத்திசாலின்று பாராட்டுகிறோம் ரூ. 10 கொடுத்து 100 ரூ. பொருள் வாங்கி வந்தீங்க பெரிய மகா புத்திசாலி என்று சொல்லுகிறோம் ரூபாய் குறைவாய் கொடுத்து அதிகமாக வாங்கினாலே அவன் புத்திசாலின்னு ஆகிவிட்டது.  இந்த மந்திரம் எல்லாத்திலும் வந்து விட்டது.  கல்யாணம் பண்ணினாலே குறைவாக கொடுத்து அதிகமாக வாங்கி விட வேண்டும் என்று வந்துவிட்டது.  கடையில் பண்ணுகிறதை கல்யாணத்திலும் பண்ணபோய் என்னத்துக்கடா கல்யாணம் பண்ணினோம்னு ஆகிவிட்டது.  எதுக்கு இதுலபோய் சிக்கினோம் என்று ஆகிவிட்டது.  இந்த உயிருக்கு அடிப்படையானது எதோää நாம படைத்தலுக்கு மூலமானது என்று சொல்லுகிறோமே அல்லது தெய்வீகம் என்று சொல்லுகிறோமோ அதுக்கு போய் குறைவாக கொடுத்து அதிகமாக வாங்குகிறீர்களோ அப்பொழுதே அடி முட்டாள் ஆகிவிட்டோம். இப்போ அங்கேயும் அதாவது கோவிலிலும் அது தானே சந்தையிலே பண்ணுகிறதுதானே அங்கேயும் ஆயிடுச்சு ஐயா சிவா ரூ. 10 போட்டுட்டே உண்டியலில் எனக்கு 10 லட்சம் கொடு இப்படித்தானே பிரார்த்தனை பண்ணுகிறோம்.  இல்லை சிவா நான் 10 லட்சம் போட்டு இருக்கேன் எனக்கு 10 ரூ கொடு என்று கேட்கிறோமா?  இல்லை அதே சந்தை தந்திரம் எல்லா இடத்திலும் வந்து விட்டது.  அப்படி என்றால் அன்பு என்கின்ற வாழ்க்கை வேலை செய்யாது வெறும் அன்பு மட்டுமே இருக்குபோதுää எந்த வேண்டுகோளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நன்றி அளிப்பதாகவே இருக்கும் போது கிடைத்துள்ளவற்றிற்கு நன்றி கிடைக்காதவற்றின் யாசகம் இல்லை எதிர் பார்ப்பு இல்லை. அது உண்மையான அன்பாக இருக்கிறது. அதனால் உண்மையான அன்பு எப்பொழுதும் நன்றியறிப்பதாகவே இருக்கும்.  தவறான அன்பு எப்பொழுதும் எதிர்பார்பாகவே இருக்கும் வாழ்க்கையில் நுழையும் அன்பன் குடும்பத்தில் உள்ள உறவுகள் எவ்வளஅன்புவோ அளித்திருக்கின்றன என்று நன்றி உணர்வோடு வாழ்க்கையை நடத்துவான்.                                                                                        [தொடரும் ] எழுதியவர் ஜோதிரூபன்.

No comments:

Post a Comment