Tuesday, 16 April 2013

அன்பை அறிந்தோமா? பகுதி 2

                                                                                                   
                         வறான அன்பர் இது நீ எனக்கு கொடுக்கவில்லை இது இன்னும் அதிகம் வேண்டும் என்றெல்லாம் யாசிப்பான் எதிர் பார்ப்பான் எதிர்பார்ப்பு அன்பை விஷம் ஆக்குகிறது. நன்றி அன்பை அமுதமாக்குகிறது.  வற்றாத அன்பு குறையாத ஆனந்தம் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் குறைகளைக் கண்டு கொள்ளாத குழந்தை தனம் கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல் கடவுள் கொடுக்காத இன்பங்களைக் கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்று வணங்கும்; விசுவாசம்தான் உண்மையான அன்பு.
 இவைதான் அன்பு மார்க்கத்தின் அடிப்படை தேவைகள். அன்பு ஒரு தெய்வீகமான அனுபவம் நமது காலத்தில் நாம் முழுமையாக இழந்து விட்டோம் என்றால் அது அன்புணர்வோ! நீங்கள் எடுக்கும் சுவாசம் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவாசம் எந்த கணம் வராவிட்டால் நீங்கள் அதை எடுக்க முடியாது? நீங்கள் பிறந்தது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிறப்பை நாம் தேர்ந்து எடுக்க முடியாது இறப்பை தேர்ந்து எடுக்க முடியாது. நீங்களாக பிறக்கவில்லை நீங்களாக இறக்கவில்லை உங்கள் கைத்திறமை எதுவும் அதில் இல்லை.  உங்களுடைய முயற்சியோ முடிவோ அதில் இல்லை.  இந்த உடல் எத்தனை அற்புதம் ஆனது என்பது தெரியுமா? அது உலகில் மிகச்சிறந்த அதிசயம் இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்குப் பிறகும் ஒரு பெரிய தொழிற்சாலை ஏற்படுத்தி ஆயிரம் ஆயிரம் வல்லுநர்கள் முயற்ச்சி செய்தாலும் ஒரு ரொட்டியை இரத்தமாக்கும் செயலை செய்வது முடியவே முடியாது.  நம் உடல் அந்த மாயத்தை செய்கிறது எப்படி? இந்த உடல் பிரபஞ்சக்திகளானவை. அதாவது இந்த உடல் பஞ்சபூதங்களிடமிருந்தே கிடைத்தவை அதனால் இந்த உடலுக்கும் பஞ்சபூச சக்திகளுக்கும் அன்பு செலுத்த வேண்டும் ஏன்?  உடல்தான் பஞ்சபுத சக்திகளாக உள்ளன.  பஞ்சபூதசக்தி தான் உடலாகவும் உள்ளது.  நாம் அதை நேசிக்கும் போது அன்பு செலுத்தும் போது மற்றவர்களின் உடலிலும் இது தானே இருக்க வேண்டும் என்று அறிவு தெளிவு ஏற்பட்டு மற்றவர்களிடமும் அன்டினால் நிறைய முடியும் உங்கள் கண்களை அன்பொது நோக்கிபாருங்கள்.  உங்கள் கைகளை அன்போடு தடவிபாருங்கள் எத்தகைய அற்புதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அறிய உணர முடியும் அதுபோல் பஞ்சபூதசக்திகளான நீர் காற்று ஆகாயம் நெருப்பு நிலம் ஆகியவற்றிடமும் அன்பு செலுத்த வேண்டும் ஏன்?  சூரியன் ஒரேயடியாக அஸ்தமித்து விட்டால் நீங்கள் செல்வது எங்கே?          உதிக்கும் என்று எண்ணி உறங்குவோம் காலையில் உதிக்காது பிறகு என்ன ஆகும்.  சூரியன் மட்டும் மறையாது எல்லா உயிரினங்களும் மறையம் ஏன்?  உயிர் அதனில் இருந்துதான் கிடைக்கிறது.  எல்லா சக்திகளும் உஷ்ணமும் சூரியனிடமிருந்தே கிடைக்கின்றன.  அதனால் சூரியனிடம் அன்பு செலுத்தி வணங்க வேண்டும்.  கடற்கரையில் அமர்ந்து எனக்குள்ளும் கடலின் ஒரு பகுதி இருக்கிறது என எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?  நம் உடலில் 70மூ நீர்தான் உள்ளது.  எனக்குள் இருக்கும் கடலுக்காக கடலுக்கு நான் அன்பு செலுத்த வேண்டும் சூரியனின் ஒளியும் உஷ்ணமும் எனக்குள் இருக்கிறது. அதற்க்காக சூரியனிடம் அன்பு காட்ட வேண்டும் காற்று எனது சுவாசத்தை நடத்துகிறது காற்றிடம் அன்பு செலுத்த வேண்டும் ஆகாயமும் ப10மியும் என்னை உருவாக்குகின்றன அதற்க்காக அவற்றிடம் அன்பு காட்ட வேண்டும் இந்த பஞ்சபூதசக்திகள் அன்பு உணர்வை நான் தெய்வீக மானது என்கிறேன். வாழ்க்கையே தெய்வீகமாக மாறிவிடும். நதிக்கரையில் அமர்ந்திருந்தால் நதியை நோக்கி அன்பு செலுத்துங்கள் முதலில் இயற்கையிடம் அன்பை செலுத்துங்கள் அன்பின் விதை இயற்கையிடம் முதலில் மலர முடியும் ஏன்? இயற்கை உங்களுக்கு எந்த வித காயத்தையும் ஏற்புதமான மனிதர்கள் இருந்தனர் உலகம் முழுவதும் அன்பின் அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.  குhலையில் சூரியன் உதித்தால் கை குவித்து வணங்கி “நீ வாழ்க! உன் அபாரக் கருணை அற்புதமானது! எங்களுக்கு ஒளியும் உஷ்ணமும் அளித்து வாழ்விக்கின்றாய் என்று அன்போடு நன்றியோடு வாழ்த்தினர்.  இந்த பூஜை அறிவில்லாத பூஜை அல்ல இதில் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது.  சூரியனிடம் அன்பு காட்டுபவன்ää நதியை அன்னை என்று கூறி அன்பால் நிறைபவன் பூமியைத் தாய் என்று கூறி அன்பால் நிறைபவன்ää மனிதர்களிடம் அன்பற்று அதிக நாட்கள் இருக்க முடியாது. அற்புத மனிதர்கள் அவர்கள் இயற்கை முழுவதையும் அன்போடு அனைத்துக் கொண்டனர். அன்பை மலரச் செய்தனர் இதற்கு அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அன்பை நமக்குள் வரவழைக்க வேண்டும் என்றால் முதலில் இயற்கையை நோக்கி செலுத்த வேண்டும் ஒரு தத்துவம் விழித்தெழுந்து நீங்கள் அன்பால் நிறைந்திருப்பீர்கள். இயற்கை முழுவதும் அற்புதமான விஷயங்களால் நிறைந்துள்ளது.  அவற்றிடம் அன்பு காட்டுங்கள் அன்பு காட்ட எந்த சுந்தர்ப்பம் வந்தாலும் அதை தவறவிடாதீர்கள் தெரு நடுவில் நீங்கள் செல்லும்போது ஒரு பாறை கிடந்தால் அதை அன்புடன் அப்புறபடுத்துங்கள் முகம் அறியாத ஒருவர் அந்த வழி வந்து பாறையில் இடறி அடிபட்டுக் கொள்வாரே என்று அன்பு நிறைந்த செயலைச் செய்தீர்கள் இது உங்கள் வாழ்வையே தெய்வீகமாக மாற்றிவிடும் அன்பை செலுத்துவது எது கிடைத்தாலும் நழுவ விடாதீர்கள்.  அன்பை செலுத்துவதற்கு ஒரு விதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாளில் குறைந்து இரண்டு தன்னலமற்ற செயல்கள் பயன் கருதாத செயல்கள் எதையாது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.  அதனால் பலனின் எதிர் பார்ப்பு இன்றி எதையாவது செய்யுங்கள் அதனால் அன்பு மெல்ல மெல்ல மலர்ந்து வளரும் நாளடைவில் உங்களிடம் விரோதம் உள்ள அனைவருடனும் அன்பின் பாவனையை உணர்வீர்கள் பிறகு உங்களுக்குள் உள்ள விரோதம் அழிந்து அன்பு நிலை மேல் ஓங்கும் யார் நண்பன் யார் எதிர் என்று பிரிக்க முடியாதபடி அந்த அன்பு நிலை உயரும் யாரிடமும் விரோதம் இல்லை என்று அனைவரும் அன்பு நிலைக்குள் வந்து விடுவதை அறிவீர்கள். உணர்வீர்கள் இந்த உலகத்தில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஒரு நாள் மறையத்தான் போகிறது என்றாவது ஒரு நாள் எல்லோரும் மறையத்தான் போகிறோம். நம்முடன் வாழும் அன்பானவர்களை நான் மீண்டும் காண முடியாது என்ற எண்ணம் தோன்றினால் எனது இதயத்தில் அன்பு பிறக்காதிருக்க முடியுமா?  அன்பு நிறைந்தே இருக்க முடியும் ஒருவரை அன்பார்ந்த உள்ளத்துடன் நேசிக்கும் போது எத்தகைய ஆனந்தம் கிடைக்கிறது! ஒருவன் உலகம் முழுவதையும் அவ்விதம் அன்பு செலுத்தும் வாய்ப்பு திறக்கப்படுமானால் அவனது ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது வெறுப்பை வளர்க்கும் சந்தர்ப்பங்களை உடனுக்குடன் விட்டு விடுங்கள் ஒவ்வொரு அன்புக்கனா சந்தர்ப்பத்தையும் முழு உணர்வுடன் பற்றி கொள்ளுங்கள். 
                                                                                                                        எழுதியவர் ஜோதிரூபன்.

1 comment:

  1. அன்பே அனைத்தும் என்பதை எவ்வளவு அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete