Thursday 21 March 2013

எல்லாம் அவன் செயல் பாவ புண்ணியம் உண்டா இல்லையா



எல்லாம் அவன் செயல் என்கிறார்கள் சிலர். உன் வாழ்க்கை உன் கையில்
என்கிறார்கள் சிலர். குழப்பத்தை தீர்க்கவும். இப்படிக்கு ஆல்வின் சாம்.                  குரு;
நல்லது முதலில் நம் வாழ்க்கையானது நமதுமனம்ää அறிவுத்திறன்ää பெற்றோர்ää சுற்றம் சமூகம் நட்பு கல்வி பொருளாதாரம் நாடு (இடம்) ஆரோக்கியம் முதலியவை சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது.  நம் கைகள் மட்டுமல்ல நமது உடலே நமக்கொரு கருவிதான்.
 இந்த மேற்கூறிய விஷயங்களில் உள்ள வேறுபாடுகளால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.  திருவள்ளுவர் கூறுகிறார் “தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” முயற்சியால் கூலி வருமேயன்றி மேன்மை வரும் என்று அவர் கூறவில்லை.  ஏனெனில் தெய்வத்தால் ஆகாதெனின் என்பது வெளி உதவி சரிவர சமையப் பெறவில்லை என்றாலும் கூலி கண்டிப்பாக உண்டு. ஒருவனின் உடல் உழைப்புக்கேற்றவாறு என்கிறார். அதனால் நமது உழைப்பு திறமை சூழல் நமது எண்ணத்துக்கு ஏற்புடையவே வாழ்க்கை சூழ்ந்து அமைந்துள்ளது.

சரி “எல்லாம் அவன் செயல”; என்பதை பார்ப்போம். நமது அதாவது மனித உழைப்பு இல்லாமல் இங்கு இயற்கையில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.  ஏன் ஒருவிதை அதன் தன்மை சூழல் கேற்ப முளைக்கிறது. வளர்கிறது. உங்கள் வாய் வரைக்கும் நீங்கள் உங்கள் முயற்சியால் கொண்டு சென்ற உணவு விழுங்கிய பின் சீரணமாவது பின் கழிவாய் வெளியேறுவது எல்லாம் யார் செயல்? இப்படி “மற்ற” எல்லா விஷயங்களும் நமக்கு அப்பாற்பட்டு நடந்து வருகின்ற பிரபஞ்ச இயக்கங்கள் எல்லாவற்றையும் அவன் செயல் அதாவது “அவன் இறைவன்” என்பதை நம்புவோர்க்கு இவைகள் அவன் செயல் நம்பாதவர்க்கு அது அது பௌதீக இயக்கியவியல் ஒழுங்கு.







பாவம் புண்ணியம் உண்டா இல்லையா? பின்னூட்டத்தில் வந்த கேள்வி          குரு;

உண்டு இல்லை கிடையாது என்று உடனே சொல்லி விடமுடியாது.  இது ஒரு ஆய்வுக்குரிய விசயம் ஒன்று முதல் ஐந்தறிவு உயிரினங்களில் பாவபுண்ணிய உணர்வுகளுக்கு இடமில்லைதான் அவை இயற்கையைச் சமன் செய்யும் கருவிகளாக இருக்கின்றன.  சுpந்திக்கும் மனிதரிடையேதான் இது இடம் பெறுகிறது.

இது ஒரு மனிதனுக்கு மட்டும் அவசியம் போல் தேவைப்படுகிறது. ஒன்றுபட்டு சேர்ந்து வாழும் மனிதனிடம் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க இது உருவாகியிருக்கிறது.

சரி உண்மையிலேயே பாவபுண்ணியம் இருக்கிறதா இல்லையா?

உலகம் முழுவது மக்கள் நாடு இனம் மதம் ஆகியவற்றால் வேறுபட்டு வாழ்கிறார்கள்.

ஒரு சாரார்க்கு பாவமாய் இருப்பது மற்றொரு சாராக்கு பாவமாய் இல்லை.  இதிலே வேறுபாடு வருகிறது.

இந்த புண்ணியம் என்பதில் மட்டும் கொஞசம் ஒற்றுமை இருக்கிறது ஏனெனில் அது சுயநலமுடையது.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு ஊரில் ஒருவர் தனது நண்பருக்கு கடை ஒன்றை எடுத்து கொடுத்து பண உதவி செய்து வியாபாரம் செய்ய உதவி செய்கிறார்.  உதவி பெற்ற நண்பரும் திறமையுடன் நன்கு உழைத்து கடையை நடத்தி வந்தார் அதனால் அவருக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்க்கு வியாபாரம் குறைந்து நஷ்டமடைந்து கடனாளி ஆகி ஊரைக்காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டார்.

இங்கே நண்பருக்கு உதவியவர் செய்தது புண்ணியமா? பாவமா? சிந்தித்து பாருங்கள்.

ஒரு செயலுக்கு பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அதில் வரும் இன்பதுன்பங்களையே பாவம்ää புண்ணியம் என்கிறோம்.  

1 comment:

  1. உங்களது ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/spiritual என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் ஆன்மீக தகவல்கள். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete