Tuesday 18 February 2014

இரண்டு இஸ்லாமியர்களும் ஒரு முருகன் பதிகமும்!

பதினெட்டாம் நூற்றாண்டு!
        இராமதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி அவர்களின் ஆட்சிக்காலம்.  ங்கு அரசவைக்கவிராக விளங்கியவர் சேதுகவி ஜவாதுப்புலவர் என்பவர். இஸ்லாமிய நெறியைச் சார்ந்த இவரின் இயற்பெயர் முகமது மீர் ஜவாதுப்புலவர்.

                  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் உள்ள
எமனேஸ்வரம் என்னும் ஊரில் பிறந்த இவர் தமிழிலும் வடமொழியிலும் வல்லமை பெற்றவர்.ழு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்.

                தமிழ் இலக்கண இலக்கிய அறிவுடன் சைவசித்தாந்த தத்துவப்புலமையும் கொண்டு விளங்கினார்.  இவர் புலவர் மட்டுமல்லாது பெரும் மகானாகத்திகழ்ந்து இறையருளால் பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியர் என்பது இவரது வாழ்க்கை வரலாறு மூலம் தெரிய வருகிறது.

            இவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத்தமிழ், நாகைக்கலம்பகம், மதீனந்தாதி,ராஜராஜேஸ்வரி,பஞ்சரத்ன மாலை,ண்ணக்கவிகள்,சீட்டுக்கவிகள், சித்திரக்கவிகள்,மாலைமாற்றுகள், தனிப்பாடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

           அந்நாளில் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் திண்ணப்பச்செட்டியார் என்பவரின் பேரன் பழனியப்பச்செட்டியார் என்பவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமலிருந்தது. ஜவாதுப் புலவரிடம் சென்று முறையிட்டார். ஜவாதுப்புலவரும் பழனியப்பச் செட்டியாரின் குலதெய்வமான கொடுமளூர் முருகன் மீது பதிகம் பாடினார் அதுவே கொடுமளுர் முருகன் பதிகம் ஆகும். அப்பதிகத்தை தொடர்ந்து பாடிவர குழந்தை வரம் கிடைக்கும் என்று வாழ்த்தினார்.அவ்வண்ணமே நிகழ்ந்து இன்று அந்தக் குடும்பம் 450 கிளைகளாக பரந்து விரிந்தது மட்டுமல்லாமல்,பல தேசங்களிலும் பெரும் செல்வந்தர்களாக புகழோடு வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் திணா வகைஎன்றழைக்கப்படுகின்றார்கள்.

                                         21-ம் நூற்றாண்டு!                                               ஈரோடு கவிஞர் எழுத்தாளர்,ன்மீகச்செல்வர்,இஸ்லாமிய இலக்கிய    நூல்களை பல எழுதியுள்ளவர் ஈரோடு M.K.ஜமால் முகம்மது என்னும் சீலர்.
       இவர் எழுதிய நூல்கள்

1.    சொல்லம்பு மஹான் ஜவாதுப் புலவர்
2.    திப்பு விடுதலைப்போரின் முன்னோடி                                  3.    தியாகச் சுடர் திப்பு சுல்தான்                                                                                 4.அத்வைத கானம்
5.    மஹானந்த கீதம்
6.    வெளிச்சம்
7.    சங்கமம்
8.    நான் கண்ட பரஞ்சோதி
9.    வள்ளல் நபிகள் (ஸல்) கற்றுத்தந்த வழிபாடும் வாழ்வும்.
10.  மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான்

           இவர் வேறுயாருமல்ல மஹான் ஜவாதுப்புலவரின் வம்சாவழியில் வந்த எட்டாம் தலைமுறை பேரனார் ஆவார்.தனது பூட்டனாரன் நூல்களைத் தேடி தொகுத்து வருபவர்.கொடுமளூர்முருகன் பதிகம் என்ற தலைப்பை மட்டும் அறிந்த அவர் அந்த பாடல்களை அறியவில்லை.தேடிக் கொண்டே இருந்தார்.
                   இத்தனை வருடங்களாக இந்தப் பதிகத்தை பாடிவரும் திணா வகைகுடும்பத்தாரும் ஜவாதுப்புலவரின் வாரிசுகளை அறியவில்லை.  தனது பூட்டனாரின் பதிகத்தை தேடிவரும் ஜமால் முகமது அவர்களும் இவர்களை அறியவில்லை.

                 2012-ம் ஆண்டு ஜவாது புலவரின் வம்சாவழியில் ஜமால் முகமது என்பவர் இருக்கிறார் என திணா குடும்பத்தார் ஒருவருக்கு என்பது தெரியவருகிறது.29.09.12 அன்று அலைபேசியில் நண்பர் ஒருவர் மூலம் ஜமால் முகமது அவர்களுக்கு இதுபற்றி தகவல் வருகிறது.

       அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன தேவக்கோட்டை இராமநாதன் தனது அலைபேசியில் கொடுமளூர் முருகன் பதிகத்தை ஒலித்துக் காட்டுகிறார்.  ஜமால் முகமது அவர்களின் அணுக்கள் தோறும் ஆனந்தப் பரவசமெய்துகிறது. தனது பாட்டனாரின் அரிய படைப்பு கிட்டியதால் எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி கொள்கிறார்.கொடுமளூர் சென்று தனது பாட்டனார் பாடிய கோயிலை பார்வையிடுகிறார் அங்கு பதிகம் முழுவதும் கல்வெட்டாக வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு இன்புறுகிறார். கோயில் கோபுரத்தில் பச்சைவண்ண ஜிப்பா, வெண்தாடி,தொப்பியுடன் இஸ்லாமியத் தோற்றத்தில் ஜவாதுப்புலவரின் சிலையைக் கண்டு ஆனந்தம கொள்கிறார்.பின்னர் ஜவாதுப் புலவரின் வாழ்த்தினைப் பெற்ற பழநியப்பச் செட்டியாரின் எட்டாம் தலைமுறைப் பேரர் சுப.திண்ணப்பன் அவர்களைச் சந்திக்கிறார் 250 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புனித உறவு எட்டுத் தலைமுறைகளுக்குப்பின் புதுப்பிக்கப்படுகிறது.

           சுப. திண்ணப்பன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜவாதுப் புலவரின் வரலாற்றையும் கொடுமருர் முருகன் பதிகம்,மற்றும் அதன் விளக்கத்தையும் நூலாக வெளியிட்டார்கள்.

         சமய நல்லிணக்கத்தின் சின்னம் ஆன்மிகச் செம்மல் ஐயா சிவா.க. வேலாச்சாரியாரின் இல்லத்திருமணவிழாவின் போது சாத்தான்குளத்தில் அன்பளிப்பாகவும் வெளியிடப்பட்டது.

          ஒரு இந்துக் குடும்பத்திற்காக முருகன் மீது பதிகம்பாடும் இஸ்லாமியப் புலவர்,ஒரு இஸ்லாமியப் புலவரை சிலையாய் வடித்திருக்கும் இந்துக் கோவில்,ஒரு முருகன் பதிகத்துக்கு விளக்கம் எழுதி வெளியிடும் இஸ்லாமியர் என்று இந்நிகழ்வு உண்மையான ஆன்மீகத்துக்கு சான்றாக அமைகிறதல்லவா?

              எல்லாம் ஒன்று என்றே 
                     எல்லாம் உணர்ந்து கொண்டால்
              இல்லை மண்ணில் பேதம்
                     இல்லை வீண் விவாதம்
              அல்லன் நீங்க வேண்டும்
                     அன்பே ஒங்க வேண்டும்
              அன்பில் ஒன்று படுவோம்
                     அனைத்தும் வென்று விடுவோம்
              தினமும் நம்மை வாழ்த்திடுவோம்
                     திடமாய் நாமும் வாழ்ந்திடுவோம்
              மனமதைச் செம்மை ஆக்கிடுவோம்
                     மதமாச் சரியம் போக்கிடுவோம்
              மனிதம் ஒன்றென வாழ்ந்திடுவோம்
                     மகான்கள் வழியில் உயர்ந்திடுவோம்
              இறையுணர்வில்லாம் ஒன்றிடுவோம்
                     இவ்வுலகளாம் வென்றிடுவோம்

       என்ற ற்புதமான ஈரோடு M.K.ஜமால் முகம்மது அவர்களின் பாடலோடு நிறைவு செய்கிறேன்.

             ' மஹான் ஜவாதுப்புலவர்' நூல் கிடைக்குமிடம்

                      M.K.ஜமால் முஹம்மது
                     9/4 ஈத்கா தெரு
                     B.P. அக்ரஹாசம்
                     ஈரோடு – 638 005.
                                                                          அலைபேசி 94437 02958

2 comments:

  1. இது போன்ற பல மதநல்லிணக்க சம்பவங்கள் தமிழ்நாட்டில் உண்டு. இந்த்யாவின் வட பகுதியை விட தென்பகுதியில் இந்து, முஸ்லிம்கள் ஒற்றுமையாய் வாழ்வதையும் தாண்டி ஒருவர் மற்றொருவரின் மத விழாக்களிலும் பங்கேற்கிறார்கள். நாகூர் தர்கா இதற்கு ஒரு நல்ல உதாரணம். இது போன்ற செய்திகளை பிரபல ஊடகங்கள் கூட வெளிகொண்டுவருவதில்லை என்பதை நினத்தால் வருத்தமாக இருக்கிறது.

    எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  2. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete