தவறான அன்பர் இது நீ எனக்கு கொடுக்கவில்லை இது இன்னும் அதிகம் வேண்டும் என்றெல்லாம் யாசிப்பான் எதிர் பார்ப்பான் எதிர்பார்ப்பு அன்பை விஷம் ஆக்குகிறது. நன்றி அன்பை அமுதமாக்குகிறது. வற்றாத அன்பு குறையாத ஆனந்தம் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் குறைகளைக் கண்டு கொள்ளாத குழந்தை தனம் கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல் கடவுள் கொடுக்காத இன்பங்களைக் கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்று வணங்கும்; விசுவாசம்தான் உண்மையான அன்பு.
Tuesday, 16 April 2013
Saturday, 13 April 2013
அன்பை அறிந்தோமா?
பெரும்பாலும் நாம் நடைமுறையில் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு என்பது வியாபார நோக்கம் உடையது. உண்மை அன்பு வணிக நோக்கம் உடையது அல்ல. நாம் சொல்லிக் கொண்டிருக்கும் அன்பு வரன்முறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது உண்மைக்கு எந்த வரன்முறைகளும் கட்டுப்பாடும் கிடையாது நம் வாழ்க்கை அடிப்படையே பொருளாதாரம் ஆகிவிட்டது. எப்படி? குடும்பம் நடத்துவதற்கு கல்யாணம் வரதட்சனைவரை பொருளாதாரமாகவியாபாரமாக மாற்றி விட்டோம் கோவிலுக்குச் சென்றால் அன்பை உணரலாம் என்றால் கோவிலிளும் பொருளாதாரம் வியாபாரம் ஆகிவிட்டது.
Subscribe to:
Posts (Atom)