பகவான் ரமணரின் நான் யார் என்ற நூலை படித்தேன் ஒன்றும் புரியவில்லையே?
பெருமாள், புதூர். குரு: புரியாது! எந்த நூலுமே எந்த
நோக்கத்தோடு படிக்கிறீர்களோ அதற்குத் தக்கவாறு அது புரிந்து
கொள்ளப்படும்.நான் யார் என்ற நூலை படிக்கும்போது நான் யார் என்ற
தேடுதலோடு படிக்கவேண்டும்.நன்கு பக்குவமாக பழுத்த பழம் போன்ற இனிமையான
ரமணரை புரியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் கோவிலுக்கு சென்று
வழிபாடு முதலியவை செய்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவதே சிறந்தது.
Wednesday, 27 February 2013
இறைவன் எங்கு இருக்கிறார்
இறைவன் எங்கு இருக்கிறார்? 23-2-13 அன்று பின்னூட்டத்தில் வந்த
கேள்விக்கு குருவின் பதில் குரு:மதங்களின் வழியில் கடவுளைத்
தேடாதே! இயற்கையைப்பார்! உன் அகத்துள்ளே தேடு! உண்டு என்றால் அவன் இல்லை.
இல்லை என்றால் அவன் உண்டு. உன்னில் கரைந்து போ!
Saturday, 23 February 2013
வேதாந்தம் சித்தாந்தம் விளக்கம்
வேதாந்தம் சித்தாந்தம் விளக்கம் என்ன? குரு;வேதாந்தம் என்பது பஞ்ச பூதங்களைய பற்றிய அறிவும் வாழ்க்கை நெறிகளை சொல்வதும் ஆகும்.அது அனுமனங்களையே அதிகமாக தொக்கி நிற்கிறது. சித்தாந்தம் என்பது எதையுமே தொட்டு அறிந்து அனுபவித்து உணர்ந்து கொடுக்கப்படும் முடிவான முடிவு.
Tuesday, 19 February 2013
Subscribe to:
Posts (Atom)